தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மரக்கிளைகள் அகற்றம்
கோவை வி.கே.கே. மேனன் ரோட்டில் மின்கம்பங்களில் உரசி சென்ற மரக்கிளைகள் வெட்டி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு விபத்து நடக்கும் அபாயம் நிலவி வநதது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மரக்கிளைகளை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
குமரேசன், சித்தாபுதூர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சிக்னல் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மழைநீரை பீய்ச்சி அடித்தபடி செல்வதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
இஸ்மாயில், குனியமுத்தூர்.
தெருவிளக்குகள் வேண்டும்
இடிகரை கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் வீதியில் தெருவிளக்குகள் அமைக்கவில்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக வெளியே செல்ல அச்சம் அடைந்து உள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
முருகேசன், கிருஷ்ணாபுரம்.
குதிரைகளால் அவதி
கோவை மேட்டுப்பாளையம் சாலை என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் ரோட்டின் நடுவில் உள்ள சிறிய அளவிலான தடுப்புச்சுவரில் மாடுகள், குதிரைகள் படுத்து உறங்குகின்றன. அவைகள் திடீரென்று ஒன்றுக் கொன்று சண்டையிட்டு நடுரோட்டில் வந்து குதிக்கிறது. இதனால் அங்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மாடுகள், குதிரைகள் தொல்லையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
அருள்மொழி ஜெகநாதன், தொப்பம்பட்டி.
விபத்துகள் ஏற்படும் அபாயம்
கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் இருந்து வடக்கிபாளையம் செல்லும் சாலையில் மழை நீர் அதிகமாக சென்றதால் ரோட்டின் ஓரத்தில் ஒரு பகுதி அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும்போது ரோட்டை விட்டு இறங்கினால் விபத்து ஏற்படுவது நிச்சயம். எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையோர பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
மூர்த்தி, சூலக்கல்.
சாலையில் குழிகள்
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார் கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருவதுடன், பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்துகள் நடப்பதற்கு முன்பு இங்கு சாலையில் உள்ள குழிகளை மூடு வழிவகை செய்ய வேண்டும்.
ராமன், கோவை.
வீதியில் சூழ்ந்து நிற்கும் மழைநீர்
மேட்டுப்பாளையம் தாலுகா சின்னகள்ளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகாபுரத்தில் பெய்த மழை காரணமாக வீதிகளில் மழைநீருடன் கழிவுநீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழக்கூடிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் நீரை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.
சுரேஷ், ஓதிமலை.
போக்குவரத்து நெரிசல்
கோவை கோர்ட்டு அருகே செல்லும் அரசு கல்லூரி ரோட்டில் இருபுறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த வழியாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
ஆனந்தன், காந்திபுரம்.
நூலகத்தில் புதர்கள் ஆக்கிரமிப்பு
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூலகத்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த நூலக வளாகத்தில் புதர்கள் சூழ்ந்து இருக்கிறது. இதனால் அங்கு விஷப்பாம்புகள், பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் பயந்து ஓடக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கு வளர்ந்து உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
மணியரசு, பாப்பம்பட்டி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை அருகே உள்ள வேடப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு காரமடை பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யாமல் அடைத்த படி உள்ளது. இதனால் சாக்கடையில் தேக்கம் ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
வெங்கடேஷ், வேடப்பட்டி.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை சுகுணாபுரம் கிழக்குப்பகுதி செந்தமிழ்நகர் செல்லும் வழியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவை சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
முஸ்தபா, சுகுணாபுரம்.
Related Tags :
Next Story