திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் 20 ரவுடிகள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் 20 ரவுடிகள் கைது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் கொலை, கொள்ளை, வழிப்பறி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதில் சரித்திர பதிவு குற்றவாளிகள் 300 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டு, அவற்றில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிடிவாரண்டு நிலுவையில் இருந்த 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடிகள் மற்றும் அவர்களிடமிருந்த கத்திகள் கைப்பற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 337 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்த 60 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவும், தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 63 நபர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சுமார் 37 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளி விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story