சென்னையில் ரூ.12 கோடி நிலம் அபகரிப்பு 3 பேர் கைது


சென்னையில் ரூ.12 கோடி நிலம் அபகரிப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 10:33 PM IST (Updated: 8 Dec 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ரூ.12 கோடி நிலம் அபகரிப்பு 3 பேர் கைது.

சென்னை,

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் என்பவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள காலி மனை நிலம் இருந்தது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து கொண்டதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தரும்படியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் சத்தியசீலன் புகார் கொடுத்தார். அந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நிலத்தை அபகரித்ததாக, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த அய்யனார் (வயது 58), வெங்கடாச்சலம் (49) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல இன்னொரு வழக்கில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (51) என்பவரை கைது செய்தனர்.

தனித்தனி சம்பவத்தில் மொத்தம் ரூ.12 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story