வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டி யானை
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த குட்டி யானை
வால்பாறை
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் குட்டி யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேயிலை தோட்டங்களில் முகாம்
கேரள வனப்பகுதியில் இருந்து மானாம்பள்ளி வன்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வால்பாறை தேயிலை தோட்டங்களில் கூட்டம், கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முக்கோட்டுமுடி, தோணிமுடி ஆகிய எஸ்டேட் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட யானைகளை முகாமிட்டு, சுற்றத்திரிந்து வருகின்றன.
இந்த யானை கூட்டத்தை சேர்ந்த குட்டி யானை ஒன்று, கூட்டத்தில் இருந்து கெஜமுடி எஸ்டேட் 3-வது பிரிவு 43-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியிலேயே நின்று வந்தது. மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இந்த யானை குட்டியை கண்காணித்து வந்தனர். இந்த குட்டி யானை மிகவும் சோர்வான நிலையில் தேயிலை தோட்ட பகுதியிலேயே படுத்திருந்துள்ளது.
குட்டி யானை சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இந்த யானைக் குட்டி படுத்திருந்த நிலையிலேயே இறந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவரின் உத்தரவின் பேரில் உதவி வனபாதுகாவலர் செல்வம் தலைமையில் வனத்துறையின் கால்நடை டாக்டர் சுகுமார் சம்பவயிடத்திலேயே இறந்த குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் உடல் தேயிலை தோட்ட பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
இறந்த ஆண் குட்டியானைக்கு 3 முதல் 5 வயது வரை இருக்கும், உடல்நல குறைவு காரணமாக யானைக்கூட்டத்துடன் நடந்து செல்ல முடியாத நிலையில் உணவு ஏதுவும் சாப்பிடாமல் இருந்ததால் இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story