கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2021 12:17 AM IST (Updated: 9 Dec 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரத்தி சென்ற போலீசார்

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, அதை கடத்தல்காரர்கள் கேரளாவில் விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடிகள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் நடுப்புணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றனர். போலீசார் துரத்து வருவதை பார்த்ததும் ஜமீன் காளியாபுரத்தில் காரை நிறுத்தி விட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்றனர்.

விசாரணை

இதையடுத்து போலீசார் வந்து காரை திறந்து பார்த்த போது உள்ளே மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் காருடன் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டது.

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காரில் இருந்த 1 ¼ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நல்லூரில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கடத்தல்காரர்களை தேடி உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.

Next Story