சிவசங்கர் பாபா வழக்கு: 3 ஆசிரியைகள் நேரில் ஆஜராக வேண்டும்


சிவசங்கர் பாபா வழக்கு: 3 ஆசிரியைகள் நேரில் ஆஜராக வேண்டும்
x
தினத்தந்தி 9 Dec 2021 5:33 AM IST (Updated: 9 Dec 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

சிவசங்கர் பாபா வழக்கு: 3 ஆசிரியைகள் நேரில் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகள் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு் மற்றும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு கோர்ட்டு காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி, இந்த மாதம் 22-ந்தேதி வரை சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த பள்ளியின் ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபிகா ஆகியோரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Next Story