காட்டு யானை தாக்கி முதியவர் சாவு
காட்டு யானை தாக்கி முதியவர் சாவு
துடியலூர்
துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
ஆடு மேய்க்கும் தொழிலாளி
கோவையை அடுத்த துடியலூர் ஆனைக்கட்டி தூவைப்பதி அருகே உள்ள ஆர்நாட்காடு பகுதியை சேர்ந்தவர் காளி. இவருடைய மகன் காரை (வயது 70) ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இவர், துணி துவைத்து குளிப்பதற்காக பால் கம்பெனி அருகே முள்ளுக்காடு நீரோடைக்கு சென்றார்.
காட்டு யானை தாக்கியது
அப்போது அவருக்கு எதிரே திடீரென்று காட்டுயானை ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் அவரை காட்டு யானை துரத்தி சென்று துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.
இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த காரையை யானை காலால் மிதித்தது. யானை தாக்கியதில் காரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதற்கிடையே அந்த பகுதியில் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சரஸ்வதி ஆடு மேய்க்க சென்றார்.
அப்போது யானை தாக்கி காரை இறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் கோவை வனச்சரகர் அருண் சிங், தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்த காரையின் மனைவி வள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குமார் என்ற மகனும் பார்வதி என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
Related Tags :
Next Story