மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2021 8:55 PM IST (Updated: 9 Dec 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கிணத்துக்கடவு

வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கண்காணிப்பு பணி

கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் போலீஸ் சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

வாலிபர் கைது

விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கல்பகசேரி திரூர் பகுதியை சேர்ந்த நவுசத் (வயது 22) என்பதும், திருப்பூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும் கேரளாவுக்கு கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. 
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக நவுசத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

1 More update

Next Story