மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற கணக்கெடுக்கும் பணி
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற கணக்கெடுக்கும் பணி
கோவை
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற கணக்கெடுக்கும் பணி இன்று (சனிக்கிழமை) முதல் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
பணி நியமன ஆணை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
மேலும் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிக ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத் தில் நாளை (இன்று) முதல் வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிக ளின் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அவர்களுக்கு தொழில், கல்விக்கடன் மற்றும் உபகரணங்கள், வேலை உள்பட எந்த தேவை இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.
25 ஆயிரம் பேருக்கு உதவி
மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களை பரிசீலனை செய்து, 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு உள்ளது.
மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. கோவையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விதை மற்றும் அங்ககச் சான்று அலுவலக இடமாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் வழங்கியவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
நடவடிக்கை
உள்ளாட்சித் தேர்தல் வருவதால் நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ளும் நிலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உருவாகி உள்ளது. அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை ஏற்க முடியாது. தோல்வி பயத்தால் இவ்வாறு பேசுகின்றனர்.
இதேநிலை தொடர்ந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதியில் தி.மு.க.விற்கு மக்கள் முழு வெற்றி கொடுத்தனர். இது நகர்ப்புற பகுதியிலும் தொடரும்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் டாஸ்மாக் கடைகளில் இதுவரை 134 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் மின்சாரத்துறை திருத்த மசோதாவை திரும்ப பெற, முதல்- அமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story