வால்பாறையில் கொடிகளில் காய்த்து தொங்கும் குறுமிளகுகள்
வால்பாறையில் கொடிகளில் காய்த்து தொங்கும் குறுமிளகுகள்
வால்பாறை
வால்பாறையில் மிளகு கொடிகளில் குறுமிளகுகள் காய்த்து தொங்குகின்றன.
ஊடுபயிராக குறுமிளகுகள்
வால்பாறையில் அதிகளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடி களுக்கு நிழல் கொடுக்கவும், மண்சரிவை தடுக்கவும் அதிகளவில் ஆங்காங்கே பல வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.தேயிலை தோட்டங்களில் இருக்கும் இந்த மரங்களில் ஊடு பயிராக குறுமிளகு கொடிகளை தேயிலை தோட்ட நிர்வாகங்கள் வளர்த்து வருகின்றன.
காய்த்து தொங்குகிறது
வால்பாறையில் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்து உள்ளது. இதன் காரணமாகவும், அவ்வபோது நிலவும் வெப்பமான காலசூழ்நிலை காரணமாகயும் குறுமிளகு கொடிகளில் அதிகளவில் மிளகு காய்கள் காய்த்து தொங்குகிறது.
இந்த மிளகு காய்கள் பிப்ரவரி மாத இறுதியில் பக்குவமடைய தொடங்கி விடும். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து மிளகு காய்களை அறுவடை செய்யும் பணி தொடங்கும்.
அதிக உற்பத்திக்கு வாய்ப்பு
அதிமழை இடையே வெப்பமும் நிலவியதால் இந்த ஆண்டு மிளகு உற்பத்தி அதிகளவில் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகு ரூ.550 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது.
அதிகளவில் குறுமிளகு உற்பத்தி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வருகிற நாட்களில் மிளகு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினர்
Related Tags :
Next Story