முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்


முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:16 PM IST (Updated: 10 Dec 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஆலந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அண்ணாமலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி மரணம் அடைந்த, ஆரம்பகால கட்சி தொண்டர் அண்ணாமலையை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story