கலைஞர் ஜாகீர் உசேன் விவகாரத்தில் அரசு நாடகம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காஞ்சீபுரத்திற்கு வருகை தந்தார்.
அதற்கு முன்னதாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியை காணொளி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். கவர்ச்சிகரமாக மாநில பட்ஜெட்டை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என எதிர்பார்க்கிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது என அவர் கூறினார்.
Related Tags :
Next Story