சித்தாமூர் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். வீட்டு மனை பட்டா, வேளாண் சம்பந்தப்பட்ட இடுபொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரச்சினைகளுக்கும் 2 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், செய்யூர் எம்.எல்.ஏ. பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி, மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வீரமுத்து, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரேமா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story