ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; நாளை நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 17 Dec 2021 2:09 AM IST (Updated: 17 Dec 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு
தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 478 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,912 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story