2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உயர்மின் கோபுர திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு; அ.கணேசமூர்த்தி எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உயர்மின் கோபுர திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு; அ.கணேசமூர்த்தி எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:18 AM IST (Updated: 17 Dec 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

உயர் மின்கோபுர திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அ.கணேசமூர்த்தி எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசினார்.

புதுடெல்லி

உயர்மின் கோபுர திட்டம்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பவர்கிரீட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் சார்பில் 13-க்கும் மேற்பட்ட உயர்மின் கோபுர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களால் தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் நேரடியாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயிகளுக்கு எதிரானது
விவசாயம் தொடர்ந்து நஷ்டம்     அடைந்து  வருகிறது. இந்த சூழலில், விவசாய நிலங்களின் மதிப்பு மட்டுமே விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், உயர் மின்கோபுர திட்டங்களால் விவசாய நிலத்தின் மதிப்பு முற்றிலும் சரிவடைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி நிலத்தில் உள்ள மரங்கள், பயிர்கள், கிணறுகள், ஆழ்குழாய்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
இவ்வாறு ஏற்படும் அனைத்து சேதாரங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் இந்த கொள்கைக்கு எதிராக மத்திய அரசின் மின்சாரத்துறை கடந்த 2015-ம் ஆண்டு தன்னிச்சையாக இழப்பீடுகளுக்காக வழிகாட்டு நெறி முறைகள் வகுத்து உள்ளது. இது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
2013-ம் ஆண்டு சட்டம்
எனவே உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நலன் கருதி 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அ.கணேசமூர்த்தி எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசினார்.
இதுபோல் கெயில் எரிவாயு குழாய்களை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பதிப்பதை கொள்கை ரீதியான முடிவாக மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
1 More update

Next Story