ஓடும் ரெயிலில் வியாபாரி உயிரிழப்பு


ஓடும் ரெயிலில் வியாபாரி உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:57 PM IST (Updated: 17 Dec 2021 2:57 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் வியாபாரி மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தியாகசீலன்(வயது 60). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர், சொந்த ஊரான நாசரேத் செல்வதற்காக தனது மனைவி ஜெயாவுடன் நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

தாம்பரம் அருகே சென்றபோது வியாபாரி தியாகசீலன் ஓடும் ரெயிலில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் சக பயணிகள், தாம்பரம் ரெயில் நிலையம் வந்ததும் அவரை கீழே இறக்கினர். பின்னர் டாக்டர் வந்து அவரை பரிசோதனை செய்தபோது, தியாகசீலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஓடும் ரெயிலில் மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story