செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 6:10 PM IST (Updated: 17 Dec 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,543 ஆக உயர்ந்துள்ளது. 567 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 207 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story