தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
சாக்கடை வடிகால் வசதி
அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சி புதுமேட்டூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த சாக்கடை கால்வாயின் 100 மீட்டர் தூரத்துக்கு வடிகால் கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. அதுமட்டுமின்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பொதுமக்கள், புதுமேட்டூர்.
ஆபத்தான மின்கம்பம்
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்.வி.ஆர்.காலனி செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் அருகில் ஒரு மரம் உள்ளது. இந்த மரம் வழியாக செடி-கொடிகள் வளர்ந்து இந்த மின்கம்பம் மீது படர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமி, ஈரோடு.
சுகாதாரக்கேடு
ஈரோடு சோலாரில் உள்ள ஈ.பி. நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது பாசி படர்ந்து காணப்படுவதுடன், ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதுடன், சுகாதாரக்கேடும் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் அந்த பகுதியில் தேங்கி உள்ள நீரின் மட்டமும் உயர்கிறது. எனவே பாசி படர்ந்த நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோலார்.
மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
கோபி வட்டம் கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையம் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இது கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லாரி மோதியதில் வளைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழலாம். மேலும் போக்குவரத்தும் அதிகம் உள்ள பகுதியாகும். மின்கம்பம் விழுந்தால் பேராபத்து ஏற்படலாம். உடனே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு வேறு மின்கம்பத்தை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
லோகநாதன், நாகர்பாளையம்.
சாலை அமைக்க வேண்டும்
மொடக்குறிச்சி தாலுகா 46 புதூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது முள்ளாம்பரப்பு-கிளியம்பட்டி ரோடு. இங்குள்ள மண் ரோடு மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைநேரத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே தார்சாலை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.காளீஸ்வரன், முள்ளாம்பரப்பு.
Related Tags :
Next Story