சீனாபுரம் சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 19 Dec 2021 3:20 AM IST (Updated: 19 Dec 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

சீனாபுரம் சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

பெருந்துறை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 50-ம், இதே இன கிடாரி கன்றுகள் 100-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 30-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 60-ம், விற்பனைக்கு வந்திருந்தன. 
சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்றது. சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்றது. மாடு மற்றும் கன்றுகள் ரூ.27 லட்சம் வரை விற்றிருக்கலாம் என்று சந்தை நிர்வாகிகள் கூறினார்கள்.

Next Story