தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 19 Dec 2021 3:26 AM IST (Updated: 19 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

புதர்களை அகற்றுவார்களா?
ஈரோடு அருள்வேலவன் நகரின் நுழைவு வாயிலில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் புதர்களுக்குள் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த புதர்களை அகற்றி சாக்கடையை மீட்க வேண்டும்.
மோகன், ஈரோடு.

பழுதடைந்த ரோடு 
ஈரோடு வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் சாலையில் சிமெண்டு ரோடு பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இந்த ரோட்டில் செல்ல பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இரவு நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் பழுதடைந்த இந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும்.
சத்யா, ஈரோடு.

புதர் சூழ்ந்த அங்கன்வாடி (படம்)
நம்பியூர் அருகே உள்ள பொலவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகரில் (6-வது வார்டு) அங்கன் வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி புதர் சூழ்ந்து காடுபோல் காணப்படுகிறது. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உள்ளே இருந்தாலும் தெரியாது. எனவே குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும். 
பொதுமக்கள், ராஜீவ் நகர். 

தேங்கியுள்ள சாக்கடை
ஈரோடு முத்தம்பாளையத்தில் (பகுதி 2) சாக்கடை கழிவு நீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே முத்தம்பாளையம் பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே சாக்கடையை தூர்வார வேண்டும். 
சாந்தி தங்கதுரை, முத்தம்பாளையம். 

ரோட்டில் பள்ளம்
அத்தாணி பேரூராட்சி அலுவலகம் அருகே அத்தாணியில் இருந்து சத்தி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சின்னுசாமி, அத்தாணி.


செடிகள் சூழ்ந்த மின்கம்பம்
தாளவாடியை அடுத்த அண்ணா நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்துக்கு செல்லும் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அந்த மின் கம்பத்தில் இருந்து சில சமயங்களில் தீப்பொறி ஏற்படுகிறது. எனவே மின்கம்பத்தில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அண்ணாநகர்.

பாதியில் நிற்கும் சாக்கடை வடிகால்
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுமேட்டூரில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 மீட்டர் தூரத்துக்கு கட்டப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் புதுமேட்டூரில் சாக்கடை வடிகாலை முழுமையாக கட்டித்தர வேண்டும். 
சண்முகவேல், புதுமேட்டூர்.

Next Story