சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:01 AM IST (Updated: 20 Dec 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் இந்த பணி நடைபெறுகிறது. 
600 குழுக்கள்
இந்த பணியில் வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 5 பேரை கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. 10 வனச்சரகங்களுக்கும் சேர்த்து இதுபோல் ெமாத்தம் 600 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 
இந்த குழுவினர் முதல் 3 நாட்கள் பகுதி நேர கணக்கெடுப்பு முறையிலும், மீதம் உள்ள 3 நாட்கள் நேர்கோடு பாதை கணக்கெடுப்பு முறையிலும் நடைபெறுகிறது. இதற்காக வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் உள்ள கீறல்கள், குட்டையில் உள்ள பகுதிகளில் பதிந்துள்ள கால் தடங்கள் ஆகியவைகளை கணக்கில் எடுக்கப்படும். 
நவீன கருவிகள்
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உள்பட்ட பண்ணாரியை அடுத்த பெல்லாரி என்னும் இடத்தில் வனச்சரகர் பெர்னாட், வனவர் தீபக்குமார் உள்பட வனத்துறை குழுவினர் நேற்று காலை 9 மணி அளவில் பணியை தொடங்கினர். வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்காக வனத்துறையினர் நவீன கருவிகளை வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். 6 நாட்களுக்கு பிறகு சென்னையில் உள்ள வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து அறிக்கையாக அனுப்பப்படும். இதைத்தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து அறிவிப்பார்கள்.

Next Story