ஈரோடு மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 290 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 5 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 707 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 578 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story