பவானிசாகர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்


பவானிசாகர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:32 AM IST (Updated: 20 Dec 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளி பயணிகள் ஸ்டார்ட் செய்தனா்.

பவானிசாகர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் பயணிக்கும் இந்த அரசு பஸ் அடிக்கடி பழுது ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தெங்குமரஹடா வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் வழியாக கோத்தகிரிக்கு அரசு பஸ் வன கிராமங்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணித்த வன கிராம மக்கள் கீழே இறங்கினர். பின்னர் பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு பஸ் ஸ்டார்ட் ஆனது. அதன்பின்னர் பஸ் அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து வனகிராம மக்கள் கூறும்போது, ‘தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்சை நல்ல நிலையில் பராமரிக்க போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story