தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 20 Dec 2021 2:40 AM IST (Updated: 20 Dec 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

புதர் மண்டிய நடைமேடை
ஈரோடு சம்பத்நகரில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் தியாகி குமரன் சாலை நடை மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த நடை மேடை புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல பயப்படுகிறார்கள். மேலும் இந்த புதருக்குள் விஷ பாம்புகள் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த நடைமேடையை ஆக்கிரமித்து உள்ள புதர்களை அகற்றவேண்டும்.
செந்தில், சம்பத்நகர், ஈரோடு.

ரோட்டின் இருபுறமும் குப்பை 
சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மன் கோவில் அருகே ஆயக்காட்டுபுதூர் காலனி உள்ளது. இந்த காலனியில் இருந்து அண்ணாமலைக்கோட்டை பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சாலையில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பையில் பாலித்தீன் பைகள் கிடக்கிறது. காற்று வீசும்போது குப்பையில் இருந்து பாலித்தீன் பைகள் மற்றும் தூசுகள் பறப்பதால் அந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. 
பொதுமக்கள், சிவகிரி.


மின் ஒயரில் கொடிகள் (படம்)
ஈரோடு சம்பத் நகர் நால்ரோட்டில் இருந்து உழவர் சந்தை செல்லும் சாலையில் ரோட்டு ஓரத்தில் மின்சார ஒயர்கள் அதிகளவில் உள்ளது. இதன் அருகில் மரங்களும் வளர்ந்து உள்ளது. இந்த மரத்தின் அருகில் கொடிகள் வளர்ந்து மரம் வழியாக மின்சார ஒயர்களில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளங்கோ, ஈரோடு.

பாதாள சாக்கடை நீர்
ஈரோடு குமலன்குட்டை பெருந்துைற ரோட்டில் பாதாள சாக்கடையில் இருந்து தண்ணீர் வெளியே வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் வாகனங்களில் செல்லமுடியவில்லை. மேலும் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே வெளியேறும் நீரை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு

ஆபத்தான குழி
ஈரோடு பெரியசேமூர் பெனாங்குகாரர் தோட்டம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தரைபாலத்தை சரி செய்வதற்காக தோண்டினார்கள். ஆனால் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். அந்த வழியாக செல்லும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் சில நேரங்களில் இந்த குழிக்குள் விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் ஆபத்தான குழியை மூடநடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராஜூ, ஈரோடு.

துர்நாற்றம் வீசும் குப்பை 
டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையத்தில் காட்டுவலவு செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே கொண்டையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் சுகாதார கேடு ஏற்படுத்தும் குப்பை குவியலை சுத்தப்படுத்தி பொருத்தமான இடத்தில் குப்பை தொட்டி வைக்கவேண்டும்.
ராஜா என்கிற பழனிச்சாமி, கொண்டையம்பாளையம்.


Next Story