படப்பை அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை
படப்பை அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உடல் தார்ப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமா?
மேலும் சங்கரை வேறு எங்கேனும் வைத்து கொலை செய்து ஆட்டோவில் எடுத்து வந்து வீசிவிட்டு சென்றனரா? அல்லது சோமங்கலம் பகுதியிலேயே வைத்து கொலை செய்தனரா? இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story