ஓடும் ஜீப்பில் திடீர் மாரடைப்பு; டிரைவர் சாவு

கோபி அருகே ஓடும் ஜீப்பில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஜீப் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
கோபி அருகே ஓடும் ஜீப்பில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஜீப் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டிரைவர்
ஈரோடு மாவட்டம் கோபி கருமா வீதியை சேர்ந்தவர் அதியமான் (வயது 64). இவர் கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜீப் ஒப்பந்த டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று வேட்டைக்காரன் கோவில் பகுதியில் இருந்து கோபிக்கு அதியமான் ஜீப் ஓட்டி வந்தார்.
மாரடைப்பு
கோபியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது அதியமானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஜீப் இருக்கையிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனால் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் அங்குள்ள ரோட்டில் ெமாபட்டில் சென்று கொண்டிருந்த வடுகபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) மற்றும் அவருடைய மகள் பானுமதி (23) ஆகியோர் மீது ஜீப் மோதியது. மேலும் அந்த ஜீப் நிற்காமல் ஓடியதுடன், ரோட்டோர சுவரில் மோதி நின்றது.
படுகாயம்
இந்த விபத்தில் ரவிச்சந்திரன், பானுமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதியமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






