மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி


மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 20 Dec 2021 9:58 PM IST (Updated: 20 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி மின் கோட்டத்தில் மின் சிக்கன வார விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி மின்சார வாரியம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதை செயற்பொறியாளர் செந்தில்வேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பேரணி நியூஸ்கீம் ரோடு வழியாக வந்து காந்தி சிலை பகுதியில் முடிந்தது. மேலும் பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி செயற்பொறியாளர்கள் அன்புமணி, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

ஐ.எஸ்.ஐ. முத்திரை

மின் சிக்கனம் குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
மின் நுகர்வோர்கள் குமிழ் விளக்கை பயன்படுத்துவதால் 90 சதவீதம் மின்சாரம் வெப்ப வடிவில் வீணாகுகிறது. சுவர்களுக்கு வர்ணம் பூசும்போது அடர்த்தியான நிறங்களை தவிர்த்து வெளிர்நிற பூச்சு இடவும். 

தொழிற்சாலைகளில் தானியங்கி கருவிகள் மூலம் மின்சாரம் சேமிக்க வேண்டும். விவசாயிகள் தோட்டங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை மற்றும் 4 நட்சத்திர குறியீடு பெற்ற மோட்டார்களை உபயோகிக்க வேண்டும். வளைவுகளை முடிந்த அளவு குறைக்க வேண்டும். இருமுனை மின்சாரம் இருக்கும்போது மோட்டார்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story