கிரில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்


கிரில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:59 PM IST (Updated: 20 Dec 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

கிரில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர், 
திருப்பூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகர பகுதியில் 500 கிரில் தொழில் நிறுவனங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1,500 கிரில் தொழில் நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை. இந்த தொழிலில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தின் தலைவர் வடிவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக இரும்பின் விலை 100 சதவீதம் உயர்ந்து விட்டதால் தொழில் முடக்கம் ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே இரும்பு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் போது விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளிக்கு குடும்ப நல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குறுந்தொழிலாக செய்கிற எங்கள் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி போடப்படுவதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். 7.5. கிலோ வாட் வரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். எங்கள் தொழில் பற்றிய பாடங்களை தொழிற்பயிற்சி பள்ளிகளில் விருப்ப பாடமாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

Next Story