ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 51 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 341 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 363 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 56 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 707 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 578 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story