மாடம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்


மாடம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 Dec 2021 5:45 PM IST (Updated: 21 Dec 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, தாது உப்புக்கலவை, குடற்புழு நீக்க மருந்து, மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதில் மாவட்ட கவுன்சிலர் அமுதா, மாடம்பாக்கம் ஊராட்சி செயலாளர் மொய்தீன், கால்நடை உதவி மருத்துவர் கீதா, மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறந்த முறையில் கன்றுக்குட்டி வளர்த்த 6 பேருக்கு முகாமில் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story