காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு முகாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு முகாம்
x
தினத்தந்தி 21 Dec 2021 6:15 PM IST (Updated: 21 Dec 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பதிவு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவுத்தள பதிவு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் தேவரியம்பாக்கம், தோண்டங்குளம், உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த பல்வேறு பணிகளை செய்யும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக பதிவு செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் லிங்கேஸ்வரன், துணை ஆய்வாளர் கமலா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஞானவேல், பூபதி, சூரியகாந்தி, கற்பகம், முன்னாள் ஊராட்சி மன்ற் தலைவர்கள் எல்லப்பன், பாளையம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story