மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 Dec 2021 7:10 PM IST (Updated: 21 Dec 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மி்ன்சாரம் தாக்கியது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 40), இவர் நல்லம்பாக்கம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் கல் உடைக்கும் கிரஷரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரஷரில் மின் மோட்டாரை ஆன் செய்து லாரியை தண்ணீர் ஊற்றி கழுவிகொண்டிருந்தார்.

பின்னர் மின்மோட்டாரை சுவிட்ச் ஆப் செய்யும் போது மின்சாரம் தாக்கி அருகிலுள்ள தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

சாவு

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story