நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி
நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி
சரவணம்பட்டி
விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி செலுத்தினார்.
நாராயணசாமி நினைவு நாள்
விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37-வது நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம் பாளையம் கிராமத்தில் உள்ள மணி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
அங்கு, நாராயணசாமி நாயுடு திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி
வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணி மண்டபத் தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி ஆகியோர் நாராயணசாமியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ்
நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைதலைவர் அழகு ஜெய பால் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், மாநில பொதுச்செயலாளர்கள் கணபதி சிவக் குமார், மகேஷ்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொறுப்பாளர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சிகள்
நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தில் ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகிகளும்,
பாரதிய ஜனதா மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நிர்வாகிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளும், தே.மு.தி.க. நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story