போலீஸ் நிலையத்தை திமுக வினர் முற்றுகை


போலீஸ் நிலையத்தை திமுக வினர் முற்றுகை
x
தினத்தந்தி 21 Dec 2021 10:05 PM IST (Updated: 21 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தை திமுக வினர் முற்றுகை

நெகமம்

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நெகமம் போலீஸ் நிலையத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தாக்குதல்

நெகமம் காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 32). இவர் நெகமம் பழைய பஸ் நிலையம் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் மற்றும் போலீசார் அங்கு சென்று கடையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 3¾ கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 
 இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதுதொடர்பாக தங்கவேலை நெகமம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள், தங்கவேலை தாக்கியதாக தெரிகிறது. 

முற்றுகை

இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கவேலை உடனடியாக பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது கண்டு தி.மு.க.வினர் நெகமம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றி அறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  மேலும் புகையிலை விற்பனை குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story