இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
வால்பாறை
வால்பாறையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வால்பாறையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்த வேண்டும். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக நடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சிறு சிறு வீட்டுப்பாடம் வழங்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் கூறியதாவது:-
தன்னார்வலர்களுக்கு பல்வேறு பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள் மூலமாகவும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்டு அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். பள்ளி கல்வித்துறை உத்தரவு வழங்கிய பின்னர் இவர்கள் அந்தந்த எஸ்டேட் பகுதியில் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பாடங்களை நடத்த தொடங்குவார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மாலை 5.00 மணி முதல் 7.00 மணிவரை இல்லம் தேடிச்சென்று பாடங்களை நடத்துவார்கள். அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story