கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு


கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 10:07 PM IST (Updated: 21 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விலை குறைந்தது

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
ஆனைமலை, பெரியபோது, கிழவன்புதூர், மீனாட்சிபுரம் மற்றும் கேரளாவில் இருந்து 88 விவசாயிகள் கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். காங்கயம், நெகமம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்துகொண்டு கொப்பரை தேங்காயை ஏலம் எடுத்தனர். 619 மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன.

வரத்து அதிகரிப்பு

இதில் 325 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.95.50 முதல் ரூ.96 வரையும், 294 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.71.30 முதல் ரூ.85.25 வரையும் ஏலம் போனது. மழை குறைந்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கொப்பரை தேங்காய் காய வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக கடந்த வாரத்தை ஏலத்திற்கு 94 மூட்டை கொப்பரை தேங்காய் அதிகமாக கொண்டு வரப்பட்டது. மேலும் எண்ணெய் பயன்பாடு குறைந்ததால் எண்ணெய் மார்க்கெட் சரிந்து உள்ளது. வரத்து அதிகரிப்பு, எண்ணெய் மார்க்கெட் சரிவு காரணமாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு 4.15 விலை குறைந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story