கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்
கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் அடுத்த மாதம் 21-ந் தேதி நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயிகளை சந்தித்து வருகிறோம். பாமாயில் எண்ணெய்யை மானிய விலையில் சந்தைப்படுத்துவதை கண்டித்து ரேஷன் கடைகளை பூட்டு போட்டு இழுத்து மூடும் அறப்போராட்டத்தை நடத்த கள் இயக்கம் முடிவு செய்து உள்ளது. அனைத்து உரங்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளன. ரூ.1000-த்துக்கு விற்பனை செய்த பொட்டாசியம் உரம் ரூ.1700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு விவசாயிகளை பாதிக்கும். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல் ஊராட்சி உறுப்பினர் முதல் மேயர் பதவி வரை சுயேச்சை சின்னங்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சி சாராதவர்கள் பொறுப்புக்கு வந்து சேவை செய்வதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். 1967-க்கு பிறகு உள்ளாட்சிகளிடம் இருந்து வந்த தொடக்க கல்வி, சுகாதாரம் கால்நடை மேம்பாடு போன்ற துறைகளை தமிழக அரசு பறித்துக்கொண்டு விட்டது. உள்ளாச்சிகளின் அதிகாரங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்து இருப்பதை போன்று உள்ளாட்சிகளையும் மறு சீரமைப்பு செய்த பிறகே இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story