14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப்பாளையத்தை சேர்ந்தவர் பரமன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு போலீசார் அவரை போக்சோ கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோவை மகிளா கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அதன்பிறகும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கடந்த ஆகஸ்டு மாதம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பரமன் வேலை பார்த்தது தெரியவந்தது. இதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பரமனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story