பஸ் படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம்


பஸ் படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Dec 2021 1:52 AM IST (Updated: 22 Dec 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் பயணிக்க அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுஃ

பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை பெருந்துறை தினசரி மார்க்கெட் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ்சின் படிக்கட்டுகளில், சில பயணிகள் நின்றபடி பயணம் செய்து வந்ததை போலீசார் பார்த்தனர்.
உடனே போக்குவரத்து போலீசார் அந்த பஸ்சை நிறுத்தினர். பின்னர் படிக்கட்டில் நின்றபடி பயணிகள் பயணம் செய்ய அனுமதித்த அந்த பஸ் கண்டக்டருக்கு ரூ.600-யை அபராதமாக விதித்தனர். இனிமேல் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டக்டருக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். அதன்பின்னர் அந்த பஸ் அங்கிருந்து சென்றது.

Related Tags :
Next Story