பவானி சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்


பவானி சிறுவன்  ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:39 AM IST (Updated: 22 Dec 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

195 நாடுகளின் அடையாளங்களை கூறி பவானி சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சரத்பாபு. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதியரின் மகன் அம்ருத் வர்ஷன். இவருக்கு 5 வயதாகிறது. அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பில் படித்து வருகிறார்.
அம்ருத் வர்ஷன் சிறு வயதில் இருந்தே உலக வரை படங்களை பார்த்து நாடுகளின் பெயர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். 4 வயதாக இருந்தபோது 140 நாடுகளை உலக வரை படத்தில் அடையாளம் காணும் அளவுக்கு அறிவுத்திறன் பெற்று இருந்தார். தற்போது அதையும் தாண்டி 195 நாடுகளின் பெயர்கள், தலைநகரங்களை தெரிந்து வைத்து உள்ளார். நாட்டின் கொடியை பார்த்தே நாட்டின் பெயர், இந்த நாடு அமைந்து உள்ள கண்டம் உள்ளிட்ட விவரங்களையும் தெளிவாக கூறுகிறார். சமீபத்தில் இதற்காக சிறுவன் அம்ருத் வர்ஷன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
இவரை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ், பேச்சாளர் இளங்கோ ஆகியோர் பாராட்டினர்

Next Story