லாரி மோதி மெக்கானிக் பலி


லாரி மோதி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 6:40 PM IST (Updated: 22 Dec 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி மெக்கானிக் பலி

கோவை

கோவை காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 37). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று வெள்ளானைப்பட்டி பகுதியில் தொட்டிபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பசும்பொன் லிங்கம்(60) என்பவரை கைது செய்தனர்.

Next Story