போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை


போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2021 8:40 PM IST (Updated: 22 Dec 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை

கோவையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 57). கோவையில் உள்ள கோவைப்புதூரில் செயல்படும் 4-வது பட்டாலியன் போலீஸ் படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

மேலும் மேட்டுப்பாளையம் படை பிரிவு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். இதற்காக கோவைப்புதூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ் நேற்று காலை 6.10 மணிக்கு மேட்டுப்பாளையம் முகாமில் இருந்து கோவைப்புதூர் வந்தார். பின்னர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டு அறைக்கு சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மதியம் 2.10 மணியளவில் அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது செல்வராஜ் மின்விசிறியில் லுங்கி மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடும்ப பிரச்சினை?

செல்வராஜிக்கு அருள்ராணி என்ற மனைவியும், சந்தோஷ்(26) மற்றும் கிறிஸ்டோபர்(24) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் சந்தோஷ், சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் படித்து வருகிறார். அவர்களுடன் அருள்ராணி வசிக்கிறார். 

கோவையில் தங்கி இருந்த செல்வராஜ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை செல்ல முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது தற்கொலை குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story