சத்தியமங்கலம் நகராட்சி நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை


சத்தியமங்கலம் நகராட்சி நகராட்சி அலுவலகத்தை  தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Dec 2021 8:46 PM IST (Updated: 22 Dec 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
தூய்மை பணியாளர்கள் முற்றுகை
சத்தியமங்கலம் நகராட்சியில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் நேற்று பகல் 11 மணி அளவில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்கவில்லை
இதுபற்றி அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தூய்மை பணியாளர்கள் கூறும்போது, ‘எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே சம்பளம் வழங்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘2 நாட்களில் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் முற்றுகையை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story