ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற சென்னிமலை மாணவி


ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற சென்னிமலை மாணவி
x
தினத்தந்தி 22 Dec 2021 3:25 PM GMT (Updated: 22 Dec 2021 3:25 PM GMT)

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படிக்க சென்னிமலையை சேர்ந்த மாணவி ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படிக்க சென்னிமலையை சேர்ந்த மாணவி ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.
மாணவி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி காசிபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஸ்வேகா (வயது 17) என்ற மகளும், 7-வது படிக்கும் அச்சுதன் என்ற மகனும் உள்ளனர்.
ஸ்வேதா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து உள்ளார். மேலும் தனது 14-வது வயது முதல் டெக்ஸ் டெரிட்ரி குளோபல் என்ற நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிறுவனம் கிராமப்புறம் அல்லது தொலை தூர நகரங்களை சேர்ந்த மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக செயல்பட்டு வருகிறது.
ரூ.3 கோடி உதவித்தொகை
இதன் மூலம் ஸ்வேகா அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஸ்வேகா கூறுகையில், ‘ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்தேன். பிளஸ்-1 சேரும் முன்பே இந்த அமைப்பில் சேர்ந்தேன். ஆன்லைனில் உலகளாவிய தேர்வு நடைபெற்றது. இதில் நான் சிறப்பிடம் பெற்றதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது’ என்றார். கிராமப்புறத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றதற்காக அவரது உறவினர்களும், கிராம மக்களும் ஸ்வேகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story