கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2021 6:24 PM IST (Updated: 23 Dec 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். 

அதற்கிணங்க சிவகாஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு மேற்கு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த பல்லவர்மேட்டை சேர்ந்த சுகுமார் என்ற காளி (வயது 22), என்பவரை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
1 More update

Next Story