‘ஹெல்மெட்’ திருடிய பெண்கள்

‘ஹெல்மெட்’ திருடிய பெண்கள்
கோவை
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள சாலையோரத்தில் நேற்று முன்தினம் ஏராளமான இருசக்கர வாகனங்கள நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள், அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் உரிமையாளர் வைத்து சென்ற ஹெல்மெட்டை திருடி சென்றனர். இந்த காட்சி அங்குள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Related Tags :
Next Story






