கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப வழங்காமல் மோசடி

கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப வழங்காமல் மோசடி
கோவை
கோவையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவருக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 972 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டது. இதில் 445 செட்டாப் பாக்ஸ்களை மட்டும் திருப்பி அளித்தார். மீதமுள்ள 572 செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லை. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 877 ஆகும்.
இதனால் அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக பெரியகடைவீதி போலீசாரிடம் தமிழ்நாடு கேபிள் டி.வி. துணை மேலாளர் ஜோதி பாபு புகார் அளித்தார். இது தொடர்பாக இஸ்மாயில் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story






