ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 23 Dec 2021 9:05 PM IST (Updated: 23 Dec 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

பொள்ளாச்சி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதற்கிடையில் திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் திறந்ததால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதற்கிடையில் மழையின் காரணமாக பாலாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சோமந்துறைசித்தூர் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளம் குறைந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு நேற்று கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 More update

Next Story