ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வசூல் ரூ.23¾ லட்சம்


ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வசூல் ரூ.23¾ லட்சம்
x
தினத்தந்தி 24 Dec 2021 6:40 PM IST (Updated: 24 Dec 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கும் புகழ்பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தின வேல், கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 10 மாதங்களுக்கு பிறகு கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.23 லட்சத்து 73 ஆயிரத்து 845 மற்றும் 43 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளி போன்றவற்றை செலுத்தி இருந்தனர்.
1 More update

Next Story