படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலி


படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Dec 2021 5:07 PM IST (Updated: 25 Dec 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

படப்பை, 

காஞ்சீபுரம் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (29), இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

படப்பை அடுத்த பணப்பாக்கம் பகுதியில் செல்லும்போது காரை விட்டு கார்த்திக் கிழே இறங்கியுள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் கார்த்திக், அருண் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் சென்ற காரும் சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story